பதிவு செய்த நாள்
24
பிப்
2021
07:02
கோபி: கோபி பச்சமலை முருகன் கோவிலில், மூன்றாவது கும்பாபிஷேக விழா, இன்று நடக்கிறது. கோபி பச்சமலை முருகன் கோவில், கும்பாபி?ஷக விழா, கடந்த, 18ல் துவங்கியது. இதற்காக மலைக்கோவில் அடிவாரத்தில், முருகனுக்கு, 33 யாக குண்டங்கள், பரிவார மூர்த்திகளுக்கு, 21 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டன. கடந்த, 20ல், முத்தமிழ் வேந்தனுக்கு முதற்கால யாக பூஜை, 21ல் இரண்டு, மூன்றாம் கால பூஜை, 22ல், நான்காம் கால யாக பூஜை நடந்தது. நேற்று காலை ஆறு, ஏழாம் கால யாக பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். முக்கிய நிகழ்வான கும்பாபிஷேகம் இன்று நடக்கிறது. காலை, 7:00 மணிக்குள் பரிவார தெய்வங்களுக்கும், காலை, 9:05 மணிக்கு, ராஜகோபுரம், விமான கோபுரங்கள் மற்றும் மூலவர் ஆலயத்துக்கும் நடக்கிறது. இதற்கு முன், 2006ல் கும்பாபிஷேகம் நடந்தது. 15 ஆண்டுகளுக்கு பின், மூன்றாவது கும்பாபிஷேகம் நடப்பதாக, ஹிந்து அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.