கள்ளக்குறிச்சி; கனியாமூர் கும்பக்கொட்டாய் கிராமத்தில் உள்ள ஸ்ரீமுத்து மாரியம்மன் கோவில் கும்பாபி ேஷகம் வரும் 25ம் தேதி நடக்கிறது.கள்ளக்குறிச்சி அடுத்த கனியாமூர் கும்பக்கொட்டாய் கிராமத்தில் ஸ்ரீமுத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் புதுப்பிக்கப்பட்டதையொட்டி, வரும் 25ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.கும்பாபிஷேக விழா நேற்று விக்னேஷ்வர பூஜையுடன் தொடங்கியது. நேற்று மாலை தீபதுர்கா ஆராதனை நடந்தது. இன்று காலை தீர்த்த சங்கிரஹனம், மாலை அங்குரார்ப்பணம், ரக்ஷா பந்தனம், கும்பஅலங்காரம் நடக்கிறது.நாளை இரண்டாம் காலை யாக பூஜை, பூர்ணஹூதி தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து நாளை மறுநாள் 25ம் தேதி காலை 9:00 மணிக்கு கும்பாபிேஷகம் நடக்கிறது.