திருச்சுழி : திருச்சுழி மாரியம்மன் கோயிலில் மாசி பொங்கல் விழா கொடியேற்றத்துடன் நடந்து வருகிறது. தினமும் அம்மன், வெள்ளி, ரிஷப, மயில் வாகனங்களில் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி தருகிறார். பொங்கல் உற்ஸவ விழாவை முன்னிட்டு 1008 திருவிளக்கு பூஜை நடந்தது. பல்வேறு கிராமங்களை சேர்ந்த பெண்கள் கலந்து கொண்டு, அம்மனை தரிசனம் செய்தனர்.