பதிவு செய்த நாள்
25
பிப்
2021
11:02
திருமங்கலம் : திருமங்கலம் அருகே உச்சப்பட்டி துணை கோள் நகரத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீவரதராஜ பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.
பிப்., 23ல் கலசங்கள், புண்ணிய தீர்த்தங்கள், முளைப்பாரி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கோயிலில் வைக்கப்பட்டன. 2 யாகசாலை பூஜைகள் நடந்தன. நேற்று காலை 10:15 மணிக்கு புனித தீர்த்த கலசங்கள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கலசத்தில் ஊற்றப்பட்டுகும்பாபிஷே கம் நடந்தது. பின்னர் விக்கிரகங்களுக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேக பணிகளை பழனிவேல் சிவம் ஆச்சாரியார் தலைமையிலான குழுவினர் செய்தனர். ஏற்பாடுகளை பாலகிருஷ்ணன், முத்துமீனா, ஊராட்சி தலைவர் பிச்சையம்மாள், ஈஸ்வரன், கார்த்திகேயன், விமலா, கணேசன், விஜயகுமார், சாமிநாதன், வரதராஜன் மற்றும் நிர்வாக குழுவினர் செய்திருந்தனர்.