திருக்காஞ்சி கங்கைவராக நதீஸ்வரர் கோவிலில் மாசிமக தேர் திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26பிப் 2021 08:02
வில்லியனுார்;திருக்காஞ்சி மாசிமக தீர்த்தவாரியில் நேற்று தேர் திருவிழா நடந்தது. வில்லியனுார் அடுத்த திருக்காஞ்சி கங்கைவராக நதீஸ்வரர் கோவிலில் மாசி மக தீர்த்தவாரி உற்சவம் கடந்த 17ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
நேற்று காலை தேர் திருவிழா நடந்தது. சுகுமாறன் எம்.எல்.ஏ., தேர் வடம்பிடித்து துவக்கி வைத்தார்.இந்து அறநிலையத்துறை ஆணையர் சிவசங்கரன் உட்பட பலர் பங்கேற்றனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று மதியம் 12:00 மணியளவில் மீண்டும் தன் நிலையை அடைந்தது.இன்று (26ம் தேதி) 10ம் நாள் விழா மாசிமக தீர்த்தவாரி உற்சவம் நடக் கிறது. உறுவையாறு, மங்கலம், அரியூர், கரிக்கலாம்பாக்கம் உள்ளிட்ட 35க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து சுவாமிகள் தீர்த்தவாரியில் பங்கேற்கின்றன.ஒதியம்பட்டு சங்கராபரணி ஆற்றங்கரை பகுதி யில் உள்ள காசிவிஸ்வநாதர் கோவிலிலும் நாளை மாசிமக தீர்த்தவாரி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் தனி அதிகாரி சீத்தாராமன், கோவில் தலைமை குருக்கள் சரவண சிவாச்சாரியார் மற்றும் ஒதியம்பட்டு காசிவிஸ்வ நாதர் கோவில் அறங்காவலர் குழு தலைவர் கார்த்திகேயன் ஆகியோர் தலைமையில் செய்கின்றனர்.