சங்கராபுரம் - சங்கராபுரம் வள்ளலார் கோட்டத்தில் மாசி மாத பூச விழா நடந்தது.கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வள்ளலார் கோட்டத்தில் நடந்த மாசி மாத பூச விழாவிற்கு மன்ற செயலாளர் நாராயணன் தலைமை தாங்கினார். மன்ற பொருளாளர் முத்துக் கருப்பன்,ரோட்டரி முன்னாள் தலைவர் மூர்த்தி முன்னிலை வகித்தனர்.தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில தலைவர் லட்சுமிபதி வரவேற்றார். சிவஞான அடிகள் முன்னிலையில் அகவல் படித்து உலக அமைதிக்காக பிரார்த்திக்கப்பட்டது.