பதிவு செய்த நாள்
27
பிப்
2021
06:02
ஈரோடு: ஈரோடு, கோட்டை ஆருத்ர கபாலீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு நடராஜர் சன்னதி முன்புறம், 19 அடி உயர கொடி மரம் இருந்தது. பழுதானதால் அப்புறப்படுத்த முடிவு செய்தனர். இதையடுத்து, நேற்று முன்தினம் பாலாயம் செய்து, கொடிமரத்தில் இருந்த செப்பு தகடுகளை எடுத்த பிறகு, அறநிலையத்துறை, கோவில் அதிகாரிகள் முன்னிலையில், கொடி மரம் அகற்றப்பட்டது. விரைவில், தேக்கு மரத்தாலான, 19 அடி உயர கொடி மரம், தங்கமுலாம் பூசிய செப்பு தகடுகள் பொருத்தி வைக்கப்படும் என, அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.