பதிவு செய்த நாள்
27
பிப்
2021
06:02
மேட்டுப்பாளையம்:காரமடை அரங்கநாதர் கோவிலில், மாசிமக தேர் திருவிழாவின் ஆறாம் நாள் நிகழ்வில் பெட்டத்தம்மன் அழைப்பு நடந்தது.கோவை மாவட்டம், காரமடை அரங்கநாதர் கோவில், மாசிமக தேர் திருவிழா கடந்த, 21ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தேர் திருவிழாவை முன்னிட்டு தொடர்ந்து சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று முன்தினம் இரவு, 8:30 மணிக்கு கருட சேவை நிகழ்வு நடந்தது.ஆறாம் நாளான நேற்று, முக்கிய நிகழ்வான பெட்டத்தம்மன் அழைப்பு நடந்தது. காலை 8:00 மணிக்கு திருத்தேர் மகுடம் ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து அம்மன் அழைப்பில், திருக்கோவில் அர்ச்சகர் திருவேங்கட ஐயங்கார் அரங்கநாத பெருமாளிடம் அணிக்கை பெற்று, பெட்டத்தம்மன் மலைக்கு, சென்றார். இவர்களுடன் தாசர்கள், கோவிந்தா... கோவிந்தா... கோஷம் எழுப்பி, தாரை, தப்பட்டை முழங்க பெட்டத்தம்மன் மலைக்கு சென்றனர். இரவு, 10:00 மணியளவில், கோவில் திரும்பினர்.இன்று, திருக்கல்யாண உற்சவம் அதிகாலை, 5:30 மணிக்கு நடக்கிறது. இரவு, 8:30 மணிக்கு சுவாமி யானை வாகனத்தில் திருவீதி உலா வர உள்ளார். நாளை அதிகாலை, 5:30 மணிக்கு சீதேவி, பூதேவி சமேத அரங்கநாத பெருமாள் தேருக்கு எழுந்தருள்கிறார். மாலை, 4:00 மணிக்கு தோரோட்டம் துவங்குகிறது.