மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசிக் கொடை விழா கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01மார் 2021 09:03
நாகர்கோவில்: பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படும் கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசிக் கொடை விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கேரள பெண்கள் இருமுடி கட்டி வந்து கடலில் குளித்து பொங்கலிட்டு வழிபடுவதால் பெண்களின் சபரிமலை என்று பகவதி அம்மன் கோயில் அழைக்கப்படுகிறது. இக்கோயிலில் நேற்று காலை 7:45 மணிக்கு மாசிக்கொடை விழா கொடியேற்றம் நடந்தது. இதில் தெலங்கானா, புதுச்சேரி கவர்னர் தமிழிசை, கலெக்டர் அரவிந்த், தேவசம்போர்டு தலைவர் சிவகுற்றாலம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.விழா 10 நாட்கள் நடக்கிறது. மூன்று முதல் ஒன்பதம் நாள் விழா வரை தினமும் காலை, இரவு 9:30 மணிக்கு அம்மன் வெள்ளிப்பல்லக்கில் பவனி வரும் நிகழ்ச்சி நடக்கிறது. ஆறாம் நாள் விழாவில்(மார்ச் 5) நள்ளிரவு 12:00 மணிக்கு வலியபடுக்கை என்ற மகா பூஜை நடைபெறுகிறது. ஒன்பதாம் நாள் விழாவில்(மார்ச் 8) இரவு 9:30 மணிக்கு பெரிய சக்கர தீவெட்டி ஊர்வலம் நடக்கிறது. மார்ச் 9 நள்ளிரவு 12:00 மணிக்கு ஒடுக்கு பூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது.