திருமுருகன்பூண்டி : திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோவில் தேர்த்திருவிழா சிறப்பாக நடைபெற்றது. தேர்த்திருவிழாவை முன்னிட்டு தெப்பத் தேர் நிகழ்ச்சி நேற்று நடந்தது. தேரில் திருமுருகநாத சுவாமியுடன் வள்ளியம்மை வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.