இயேசுவுக்கு முன் வாழ்ந்தவர் ஆபிரகாம். அவரது வீட்டுக்கு வழிப்போக்கன் ஒருவன் பசியுடன் வந்தான். ஆபிரகாம் அளித்த உணவை சாப்பிட ஆரம்பித்தான். ‘‘ஏ முட்டாளே! சாப்பிடும் முன் இந்த உணவை அளித்த ஆண்டவருக்கு நன்றி சொல்லத் தெரியாதா?’’என விரட்டினார். ‘‘ஆபிரகாமே! நீ இப்படி செய்யலாமா? அதோ...உன்னால் துரத்தப்பட்டானே, அவன் கடந்த எழுபதாண்டுகளாக இப்படித்தான் செய்கிறான். ஆனாலும் திருந்துவான் என பொறுமையுடன் இருக்கிறேன். ஆனால், நீயோ அவனைப் பார்த்த முதல் நாளிலேயே துரத்தி விட்டாயே. என்னைப் பொறுத்தவரை நல்லவர், தீயவர்களுக்கும் ஒரே சூரியன் மூலம் தான் ஒளி தருகிறேன். ஒரே மாதிரியாக மழையையும் தருகிறேன். நீயும் என்னைப் போல நடந்து கொள்’’ எனக் கட்டளையிட்டார் ஆண்டவர்.