* புனித நதிகளில் நீராடுவோர் இரவில் நீராடக் கூடாது. * வடக்கு அல்லது கிழக்கு நோக்கி நின்று மூன்று முறை சிறிது நீரை உள்ளங்கையில் எடுத்து தலை மீது தெளிக்க வேண்டும். * புண்ணிய நதி, கடலில் நீராடுவோருக்கு சிவன், மகாவிஷ்ணு அருளால் பாவம் நீங்கும். * தீர்த்தங்களில் மூன்று முறை மூழ்கி எழுவது நல்லது. முதல் முறையால் பாவம் தீரும். இரண்டாம் முறையால் சொர்க்க வாழ்வு கிடைக்கும். மூன்றாம் முறையால் புண்ணியம் பெருகும். * நீராடியதும் அம்பிகையை வழிபட்டு குங்குமத்தால் அர்ச்சனை செய்ய விருப்பம் நிறைவேறும்.