பதிவு செய்த நாள்
02
மார்
2021
06:03
பாகூர்- பாகூர் அடுத்த குடியிருப்புபாளையம் வரசித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா நாளை (3ம் தேதி) நடக்கிறது.இதையொட்டி 28ம் தேதி மாலை 3.30 மணிக்கு விக்னேஷ்வர பூஜை, கோ பூஜை, நவகிரக ேஹாமம், வாஸ்து சாந்தி பூஜைகள் நடந்தது. நேற்று கும்ப அலங்காரம், முதல் காலயாகசாலை பூஜைகள் செய்து தீபாராதனை நடந்தது. இன்று (2ம் தேதி) 8 மணிக்கு இரண்டாம் கால யாசாலை பூஜை, கன்னியா பூஜை, மூன்றாம் கால யாகசாலை பூஜை நடக்கிறது. கும்பாபிேஷக விழா நாளை (3ம் தேதி) காலை 9.00 மணிக்கு நடக்கிறது. இதையொட்டி, காலை 6.30 மணிக்கு நான்காம் கால யாக சாலை பூஜை, 8 மணிக்கு யாத்ரா தானம், கடம் புறப்பாடு நடக்கிறது. பின், 9 மணிக்கு கோவிலின் கோபுர கலசத்தின் மீது புனித நீர் ஊற்றி, மகா கும்பாபிேஷக விழா நடக்கிறது.