கூடலுார்:கூடலுார், புலியாம்பாறை ஆயிரம்வில்லி பகவதி கோவில் திருவிழாவை முன்னிட்டு, தாலப்பொலி ஊர்வலம் சிறப்பாக நடந்தது.கூடலுார், புலியாம்பாறை ஆயிரம்வில்லி பகவதி கோவில் திருவிழா, காலை, 5:00 மணிக்கு கணபதி ஹோமத்துடன் துவங்கியது. 6:00 மணிக்கு பஞ்சகவ்ய - கலச, அபிஷேகம்நடந்தது. 9:00 மணிக்கு கொடியேற்றும் நிகழ்ச்சி நடந்தது. பகல், 12:00 மணிக்கு பெரியவீடு வண்ணார குடியிலிருந்து இளநீர், பூங்குலை, தாலப்பொலி ஊர்வலம் துவங்கி கோவிலை வந்தடைந்தது.தொடர்ந்து புதிய பூஜையும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மாலை, 6:00 மணிக்கு தீபாராதனை சிறப்பு பூஜை நடந்தது.