பதிவு செய்த நாள்
05
மார்
2021
09:03
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் கொடியேற்றத்துடன் மாசி சிவராத்திரி விழா துவங்கியது.ராமேஸ்வரம் கோயிலில் தை, ஆடி அமாவாசை, மாசி மகா சிவராத்திரி முக்கிய விழாவாக கொண்டாடப்படுகிறது.
கோயில் குருக்கள் மந்திரம் முழங்க மேஷ லக்னத்தில் காலை 10:10 மணிக்கு மாசி சிவராத்திரி விழா கொடி ஏற்றப்பட்டது. அலங்கரிக்கப்பட்ட ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்மனுக்கு மகா தீபாரதனை நடந்தது.கோயில் இணை ஆணையர் (பொறுப்பு) தனபால், தக்கார் குமரன்சேதுபதி, கோயில் உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகனன், பா.ஜ., மாவட்ட தலைவர் முரளீதரன் பங்கேற்று தரிசனம் செய்தனர். 12 நாட்கள் நடக்கும் விழாவில் மாசி சிவராத்திரியான மார்ச் 11 இரவு முழுவதும் சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம், பூஜை நடக்கும். அன்றிரவு 9:00 மணிக்கு சுவாமி, அம்மன் வெள்ளி ரதத்தில் வீதி உலா, மார்ச் 12ல் சுவாமி, அம்மன் காலை 9:00 மணிக்கு தேரோட்டமும், அமாவாசையான மார்ச் 13ல் அக்னி தீர்த்த கடற்கரையில் சுவாமி, அம்மன் எழுந்தருளிய பின் பக்தர்கள் புனித நீராடுவர்.