பதிவு செய்த நாள்
05
மார்
2021
05:03
அயோத்தி; அயோத்தியில், ராமர் கோவில் வளாகத்தை விரிவுப்படுத்தும் வகையில், 7,285 சதுர அடி நிலத்தை, 1 கோடி ரூபாய்க்கு, ஸ்ரீ ராமஜன்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை வாங்கியுள்ளது.
உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, அயோத்தியில் ராமர் கோவில் கட்ட, மத்திய அரசு, ஸ்ரீ ராமஜன்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை அமைத்தது. அயோத்தியில், 1,100 கோடி ரூபாய் செலவில், ராமர் கோவில், அருங்காட்சியகம், நுாலகம் உட்பட பலவற்றை கட்ட, அறக்கட்டளை திட்டமிட்டுள்ளது. இதற்காக, நாடு முழுதும் மக்களிடமிருந்து, அறக்கட்டளை சார்பில் நிதி வசூலிக்கப்பட்டது. இதில், 2,100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலானது. இந்நிலையில், ராமர் கோவில் வளாகத்தை விரிவுப்படுத்தும் வகையில், அருகில் இருந்த, 7,285 சதுர அடி நிலத்தை, 1 கோடி ரூபாய்க்கு அறக்கட்டளை வாங்கியுள்ளது.