மூங்கிலணை காமாட்சியம்மன் மாசி மகா சிவராத்திரி திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05மார் 2021 05:03
தேவதானப்பட்டி; மூங்கிலணை காமாட்சி அம்மன் கோயில் மாசிமகா சிவராத்திரி திருவிழா மார்ச் 11ல் துவங்குகிறது.தேவதானப்பட்டியிலிருந்து 3 கி.மீ., துாரம் மஞ்சளாற்றின் நதிக்கரையோரம் மூங்கிலணை காமாட்சியம்மன்கோயில் அமைந்துள்ளது. இங்கு அம்மனுக்கு விக்ரஹம் கிடையாது.
குச்சு வீட்டின் அடைக்கப்பட்ட கதவிற்கு மூன்று கால பூஜை நடக்கிறது.தினமும் மாலை 6 மணிக்கு உறுமி, சங்கு, சேகண்டிகள் முழங்க நடக்கும் சாயரட்சை பூஜையில் பல்வேறு காரியங்களுக்கு உத்தரவு கேட்பது வழக்கம். கோயிலில் பகல், இரவு அணையாத நெய் விளக்கு, தீபாராதனைக்கு முன் தேங்காய் உடைக்கப்படுவதில்லை. வாழைப்பழம் தோல் உரிக்கப்படுவதில்லை. குலதெய்வம் எதுவென்று தெரியாதவர்கள் இந்த அம்மனை குலதெய்வமாக ஏராளமானோர் வழிபடுகின்றனர்.இத்திருவிழாவில் தமிழகம் முழுவதும் பக்தர்கள் வருவார்கள். சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். மாசி மகா சிவராத்திரி திருவிழாவிற்கு கடந்த வாரம் முகூர்த்தக்கால் ஊன்றப்பட்டது. மார்ச் 11ல் திருவிழா துவங்கி மார்ச் 18 வரை 8 நாட்கள் நடைபெறும். ஏற்பாடுகளை செயல்அலுவலர் சந்திரசேகரன் செய்து வருகிறார்.