Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருச்செந்துார் கோவிலில் ரங்கசாமி ... பூண்டி கோவிலில் தினமலர் செய்தியால் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆண்டாள் கோயில் வந்தது ஜெயமால்யதா : பராமரிக்க திருச்செந்தூர் கோயில் பாகன்கள் நியமனம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஆண்டாள் கோயில் வந்தது ஜெயமால்யதா : பராமரிக்க திருச்செந்தூர் கோயில் பாகன்கள் நியமனம்

பதிவு செய்த நாள்

05 மார்
2021
05:03

ஸ்ரீவில்லிபுத்துார்: மேட்டுபாளையம் யானைகள் புத்துணர்வு முகாம்சென்ற ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் யானை ஜெயமால்யதா, பட்டர்கள், பக்தர்களின்உற்சாகமான வரவேற்புடன் கோயிலுக்கு வந்தது.

இதை பராமரிக்க திருச்செந்துார் கோயில் பாகன்கள் இருவர் புதியதாக நியமிக்கப்பட்டுள்ளனர். ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலுக்கு 2011ல் அசாமில் இருந்து யானை ஜெயமால்யதா கொண்டு வரபட்டது. கேரளாவை சேர்ந்த பாகன் ராஜா பராமரித்து வந்தார். மேட்டுபாளையத்தில் நடந்த யானைகள் புத்துணர்வு முகாமிற்கு பிப்.6 அன்று அழைத்து செல்லபட்டது.இதனிடையே யானையை பாகன் ,உதவியாளர் கடுமையாக தாக்கிய வீடியோ சமூக வலை தளங்களில் பரவியதையடுத்து இருவரையம் கோயில் நிர்வாகம் சஸ்பெண்ட் செய்தது.

கோவை வனத்துறை இருவரையும் கைது செய்தது.பாகன் சிறையிலடைக்கபட்ட நாள் முதல் யானை ஜெயமால்யதா, புத்துணர்வு முகாமில் ஒருவித பரிதவிப்புடன் காணப்பட்டது. இதனையறிந்த அறநிலையத்துறை, வனத்துறையினர் யானையை மீண்டும் ஆண்டாள் கோயிலுக்கே அனுப்ப முடிவு செய்தனர். பாகனின் கட்டளைக்கே யானை கட்டுபட்டதால் ஸ்ரீவில்லிபுத்துாருக்கு கொண்டு வருவதில் சிக்கல் இருந்தது. இந்நிலையில் சிறையிலிருந்த பாகனுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கபட்டு அவரது பாதுகாப்பு , பராமரிப்பிலே நேற்று காலை 10:45 மணிக்கு ஸ்ரீவில்லிபுத்துார் அழைத்து வரப்பட்டது. தெற்குரதவீதி விடயத்து மண்டபத்திற்கு வந்தடைந்த யானையைகோயில் தக்கார் ரவிசந்திரன், செயல் அலுவலர் இளங்கோவன், பட்டர் சுதர்சன், ஸ்தானிகம் ரமேஷ் வரவேற்று பழங்களை கொடுத்தனர். ஜெயமால்யதாவை பராமரிக்க திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலை சேர்ந்த பாகன்கள் சுப்பிரமணி, திருப்பதி நியமிக்கபட்டுள்ளனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மகாளயம் என்றால் கூட்டமாக வருதல் என்பது பொருள். மறைந்த நம் முன்னோர்கள் மொத்தமாக கூடும் நேரமே மகாளய ... மேலும்
 
temple news
மும்பை; மும்பையில் விநாயகர் சதுர்த்தி விழா நிறைவு நாளில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் சனிக்கிழமை இரவு பௌர்ணமி கருட சேவை வெகு விமரிசையாக நடைபெற்றது. மாலை 7:00 மணிக்கு, ... மேலும்
 
temple news
மதுரை: காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் இன்று மதுரை வருகிறார். அக்., 1 வரை ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: புரட்டாசி பவுர்ணமி யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடற்கரையில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar