ஈரோடு: ஓங்காளியம்மன் கோவில் குண்டம் விழாவில், திரளான பக்தர்கள் தீ மிதித்தனர். ஈரோடு, கோட்டை, பெரியபாவடி ஓங்காளியம்மன் கோவில் குண்டம், விழா, கடந்த பிப்.,1ல் பூசாட்டுதலுடன் தொடங்கியது. முக்கிய நிகழ்வான குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நேற்று காலை, 6:00 மணிக்கு நடந்தது. காரை வாய்க்காலில் இருந்து கரகம் எடுத்து வந்த கோவில் பூசாரி ரஞ்சித் முதலில் இறங்கினார். அவரை தொடர்ந்து பெண்கள், ஆண்கள், சிறுவர், சிறுமியர் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதையடுத்து பொங்கல் வைபவம், மாவிளக்கு எடுத்தல் நடந்தது. இரவு சிம்ம வாகனத்தில் அம்மன் திருவீதி உலா வந்தார். இன்றிரவு தெப்ப உற்சவம் நடக்கிறது. நாளை காலை மறு அபிஷேகத்துடன் விழா நிறைவு பெறுகிறது.