பள்ளிபாளையம்: பள்ளிபாளையம் காவிரி கரையோரம் உள்ள, 24 மனை தெலுங்கு செட்டியார்கள் சமூகத்தின் அருள்மிகு ஓம்காளியம்மன் கோவில் திருவிழாவில் கன்னிமார் தீர்த்தம் நடந்தது பள்ளிபாளையம் காவிரி கரையோரம், 24 மனை தெலுங்கு செட்டியார்கள் சமூகத்தின் அருள்மிகு ஓம்காளியம்மன் கோவில் உள்ளது. கோவில் திருவிழாவில், நேற்று, ஏழு பெண் குழந்தைகளை (கன்னிமார்கள் சுவாமிகள்) தேர்ந்தெடுத்து அவர்களுக்கு மஞ்சள் புத்தாடைகளை வழங்கி, ஆற்றில் இருந்து புனித தீர்த்தம் எடுத்து, ஊர்வலமாக அழைத்து வந்து கோவிலில் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் அலங்கார ஆராதனைகள் செய்யப்பட்டன. தொடர்ந்து, 18ம் ஆண்டு அன்னதான நிகழ்ச்சி நடந்தது.