திருப்பூர்: திருப்பூர் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தில், மணிபால் பழனிசாமி நினைவு அன்னம் பாலிப்பு நிகழ்ச்சி நடந்தது.இதில், திருவருட்பா ஓதுதல், அகவல் பாராயணம், செய்யுள் பாடுதல், அன்னம் பாலிப்பு, மாணிக்கவாசகர் அருளிய சிவபுராணம் வெளியீடு செய்யப்பட்டது. தலைவர் நீறணி பவளக்குன்றன் தலைமை வகித்தார். திருவருட்பா அகவல் பாராயணம் செய்யப்பட்டது. பொருளாளர் சிவபுராணம் புத்தகத்தை வெளியிட, சித்ரா ராமசாமி பெற்று கொண்டார். ஒளிவழிபாட்டை தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. சுப்பு நன்றி கூறினார்.