திருப்புவனம் : திருப்புவனம் மாரியம்மன் கோயில் மாசி திருவிழாவை ஒட்டி பூ தட்டு ஊர்வலம் நடந்தது.
ரேணுகாதேவி பூமாரியம்மன் கோயிலில் விழா கடந்த 4ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருப்புவனம் மற்றும் சுற்றுவட்டார கிராம பெண்கள் 3 ஆயிரத்திற்கும் அதிகமானோர் ஊர்வலத்தில் பங்கேற்று அம்மனுக்கு பூத்தட்டு ஏந்தி நகர் முழுவதும் வலம் வந்தனர்.திருப்புவனம் புதுாரில் தொடங்கிய ஊர்வலம் நகர் முழுவதும் வலம் வந்தனர். திருமண தடை, குழந்தை பேறு உள்ளிட்ட வேண்டுதல்செய்த பக்தர்கள்தட்டுகளில் பூக்களை ஏந்தி வலம் வந்தனர். அம்மனுக்கு மலர் அபிஷேகத்தை கோயில் பூஜாரிகள் சுரேஷ், ராஜ்குமார்,சேகர், ரஞ்சித் உள்ளிட்டோர் நடத்தி வைத்தனர். மார்ச் 12ம்தேதி பொங்கல் வைபவம் நடைபெற உள்ளது.