கடத்தூர்: கடத்தூர் அருகே, சிதிலமடைந்த மூலம்பி ஈஸ்வரர் கோவில் சீரமைக்கும் பணி நடக்கிறது. தர்மபுரி மாவட்டம், கடத்தூர் அடுத்த மடதஹள்ளியில், பழமை வாய்ந்த சுயம்புலிங்கமாக உருவெடுத்த மூலம்பி ஈஸ்வரர் கோவில் மிகவும் சிதிலமடைந்த நிலையில் இருந்தது. இது குறித்து தகவலறிந்து வந்த, சேலம் சதுர்கால பைரவர் கூட்ட அடியார்கள், 25க்கும் மேற்பட்டோர் நேற்று சுயம்புலிங்கத்தை மண்ணில் புதைந்து இருப்பதை தோண்டி எடுத்தனர். தொடர்ந்து, ஆகம விதிப்படி சிறப்பு பூஜைகள் செய்து சுவாமி சிலையை பொதுமக்களின் பார்வைக்கும், தரிசனத்துக்கு ஏதுவாக இருக்கும் வகையில், புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.