பதிவு செய்த நாள்
11
மார்
2021
05:03
பேரூர்: கோவை, ஈஷா யோகா மையத்தில், 27ம் ஆண்டு மஹா சிவராத்திரி விழா, நாளை மாலை, 6:00 முதல், மறுநாள் காலை, 6:00 மணி வரை, ஆதியோகி முன், நடைபெறுகிறது.கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளின்படி, குறிப்பிட்ட எண்ணிக்கையிலானோர் மட்டுமே நேரில் பங்கேற்க அனுமதிக்கப்பட உள்ளனர்.சத்குரு முன்னிலையில், தியானலிங்கத்தில் பஞ்சபூத ஆராதனையுடன் விழா துவங்குகிறது. இரவு முழுவதும் தமிழ், தெலுங்கு, ராஜஸ்தான் மாநில நாட்டுப் புற கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன.பாடகர் அந்தோணி தாசன், தெலுங்கு பாடகி மங்களி, ராஜஸ்தானிய நாட்டுப் புற கலைஞர் குட்லே கான் மற்றும் கர்நாடக பாடகர் சந்தீப் நாராயணன் ஆகியோரின் நிகழ்ச்சிகள் நடக்கிறது. ஈஷாவின், யுடியூப் சேனலான Sadhguru Tamilல் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
https://www.dinamalar.com/mahashivarathri/