மகா சிவராத்திரி: குலதெய்வக் கோவில்களில் குவிந்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11மார் 2021 05:03
மகா சிவராத்திரியை முன்னிட்டு, சென்னை புரசைவாக்கம், கங்காதீஸ்வரர் கோவில் வளாகத்தில், உள்ள சிவலிங்கத்திற்கு பால் அபிஷேகம் செய்து பக்தர்கள் வழிபாடு செய்தனர்.
மானாமதுரை: மானாமதுரை மற்றும் - இளையான்குடி பகுதிகளில் உள்ள தங்களது குலதெய்வக் கோவில்களில் பக்தர்கள் நேற்று மகாசிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு அதிகாலையிலேயே கோயில்களில் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பல்வேறு வகையான ஆராதனைகளையும் செய்து விரதம் இருந்து வந்த சாமியாடிகள் தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றிக் கொண்டனர். மேலும் பல ஆடு கோழி போன்றவற்றை பலியிட்டு நேர்த்திக்கடனை செலுத்தி வழிபட்டனர் மகாசிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் மானாமதுரை மற்றும் இளையான்குடி பகுதியில் உள்ள சிறப்பு வாய்ந்த கோயில்களுக்கு சிறப்பு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.