பதிவு செய்த நாள்
11
மார்
2021
11:03
ஈரோடு: பெரியமாரியம்மன் கோவில் திருவிழா, கொரோனா பரவலால், நடப்பாண்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஈரோடு பெரிய மாரியம்மன் கோவிலில், வரும், 16 ல் பூச்சாட்டி, 20ல் கம்பம் நடுதல் நிகழ்ச்சியை நடத்தி, 30ல் குண்டம் இறங்குதல், 31ல் பொங்கல் வைத்தல், ஏப்., 1ல் திருத்தேர் வடம் பிடித்தல் ஏப்.,3ல் மஞ்சள் நீராட்டம் நடத்த திட்டமிட்டு, ஏற்பாடு நடந்தது. இந்நிலையில் ஈரோடு ஆர்.டி.ஓ., சைபுதீன் தலைமையில், கோவில் நிர்வாகத்தினர், போலீசார் முன்னிலையில் நேற்று பேச்சுவார்த்தை நடத்தது. இதுபற்றி ஆர்.டி.ஓ., கூறியதாவது: மாவட்டத்தில் கொரோனா பரவல் குறைவாக இருந்தாலும், ஏராளமான மக்கள் விழாவில் கூடுவார்கள் என்பதால், சிறிய அளவில் நடத்த கோரினோம். ஆனால், கோவில் நிர்வாகமோ சிறிய அளவில் நடத்தினாலும், கூட்டத்தை கட்டுப்படுத்துவது சிரமம். எனவே கடந்தாண்டு போல, இந்தாண்டும் ரத்து செய்துவிடலாம் என்றனர். இதனால் திருவிழா ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டது. இவ்வாறு ஆர்.டி.ஓ., கூறினார்.