பதிவு செய்த நாள்
12
மார்
2021
05:03
சேலம்: சிவன் கோவில்களில் நடந்த, நான்கு கால பூஜையில், திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
மஹா சிவராத்திரியையொட்டி, சேலம் சுகவனேஸ்வரர், கடைவீதி காசி விஸ்வநாதர், செவ்வாய்ப்பேட்டை அம்பலவாணர், அரியானூர், 1,008 சிவாலயம், உத்தமசோழபுரம் கரபுரநாதர், தாரமங்கலம் கைலாசநாதர் உள்ளிட்ட அனைத்து சிவன் கோவில்களில், நேற்று இரவு, 8:00 மணிக்கு, சிறப்பு அபி ?ஷகத்துடன் பூஜை நடந்தது. தொடர்ந்து, இரண்டு, மூன்று, நான்காம் கால பூஜை, விடிய விடிய நடந்தது. அதில், திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஆத்தூர், தென்பொன்பரப்பி சொர்ணபுரீஸ்வரர் கோவிலில், ஆறுகால பூஜை நடந்தது. அதேபோல், ஆறகளூர் காமநாதீஸ்வரர், ஏத்தாப்பூர் சாம்பவமூர்த்தீஸ்வரர், பேளூர் தான்தோன்றீஸ்வரர், வீரகனூர் கங்கா சவுந்தரேஸ்வரர், தம்மம்பட்டி காசி விஸ்வநாதர் உள்ளிட்ட சிவன் கோவில்களில், நான்கு கால பூஜையுடன், சிவராத்திரி சிறப்பு பூஜை நடந்தது. கொளத்தூர் அடுத்த பாலவாடி சித்தேஸ்வரர் கோவிலில், 15 ஆயிரத்து, 8 ருத்ராட்சத்தில் உருவாக்கப்பட்ட சிவனை, பக்தர்கள் வழிபட்டனர். அருகில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோவிலில், சிறப்பு வழிபாடு நடந்தது. மேட்டூர், அச்சங்காடு வேதநாயகி, நெல்லீஸ்வரர் கோவிலில், ஆறுகால பூஜை நடந்தது. வீரபாண்டி அங்காளம்மன் கோவிலில், 1,008 சிவநாம அர்ச்சனை, திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது. அதேபோல், மாவட்டம் முழுதும் உள்ள சிவன் கோவில்களில், சிறப்பு பூஜை நடந்தது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.