விருதுநகர், : விருதுநகர் பராசக்தி மாரியம்மன்கோயில் பங்குனி பொங்கல் விழா மார்ச் 14ல் காப்புசாட்டுடன் துவங்கும் நிலையில் மார்ச் 28ல் கொடியேறுதல், ஏப்.4ல் பொங்கல், 5ல் அக்னிசட்டி, 6ல் தேரோட்டம் நடக்கிறது.
விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோயிலில் கொண்டாடப்படும் முக்கிய விழாவான பங்குனி பொங்கல் விழா 2020ல் கொரோனா ஊரடங்கு காரணமாக நடக்கவில்லை. இந்தாண்டு பொங்கல் விழா நடக்குமா என பக்தர்கள் கேள்வி எழுப்பியதை தொடர்ந்து நிர்வாகத்தினர் கலெக்டர் கண்ணனிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.தேர்தல் நடக்கும் ஏப்.6ல் மட்டும் அதிக கூட்டம் சேராத வகையில் தேரோட்டத்தை நடத்துமாறு அறிவுறுத்தியபடி கலெக்டர் அனுமதி அளித்துள்ளர். இதை தொடர்ந்து அறிவித்தது போன்று திட்டமிட்ட தேதிகளில் பங்குனி பொங்கல் விழா நடைபெறும் என ஹிந்து நாடார்கள் தேவஸ்தானம் அறிவித்துள்ளது. அதன்படி விழா மார்ச் 14ல் காப்புசாட்டுதலுடன் துவங்கி ஏப்.11ல் நிறைவு பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் அறிவிப்பால் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.