பதிவு செய்த நாள்
12
மார்
2021
06:03
வீரபாண்டி: வீரபாண்டி, அங்காளம்மன் கோவிலில், மாசி திருவிழா, கொடியேற்றத்துடன், நேற்று தொடங்கியது. அதையொட்டி, விநாயகர், அங்காளம்மன் உள்ளிட்ட அனைத்து தெய்வங்கள், கொடி மரத்துக்கு சிறப்பு அபி?ஷகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, சிறப்பு பூஜையுடன் கொடி ஏற்றப்பட்டது. இன்று, சக்தி அழைத்தல், கரகம் எடுத்தல், ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது. நாளை மயான கொள்ளை, தக்கனுக்கு உயிர் கொடுத்தல் நிகழ்ச்சி நடக்க உள்ளது. மார்ச், 14ல், கொடி இறக்கத்துடன் திருவிழா நிறைவடையும். அதேபோல், சேலம், அம்மாபேட்டை, காளியம்மன் கோவிலில், நேற்று முன்தினம், பொங்கல் வைத்தல் நிகழ்ச்சி நடந்தது. இன்று பால் குட ஊர்வலம், 1,008 லிட்டர் பால் அபி?ஷகம் நடக்கிறது. நாளை இரவு சத்தாபரணம், மார்ச், 14ல் மஞ்சள் நீராட்டு வைபவம், 15ல் ஊஞ்சல் உற்சவம், 16ல் சந்தனகாப்பு அலங்காரத்துடன் திருவிழா நிறைவடையும்.