கோவில்களை பக்தர்களிடம் வழங்க வேண்டும்: சத்குரு உருக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12மார் 2021 06:03
கோவை: கோவில்களை பக்தர்களிடம் வழங்க வேண்டும், என, ஈஷா மஹா சிவராத்திரி விழாவில் சத்குரு பேசினார்.
கோவை அருகே உள்ள ஈஷா மையத்தில் சிவராத்திரி விழா வெகு விமரிசையாக கொண்டாடப் பட்டது. கலை நிகழ்ச்சிகளுக்கிடையே சத்குரு பேசியதாவது:நம் அரசர்கள், முனிவர்கள், நாயன்மார்கள் தெய்வ பக்தியாளர்களாக வாழ்ந்ததால் தான் தமிழகத்தின் இதயமாக பக்தி உள்ளது. இதன் விளைவாகத்தான் எண்ணற்ற கோவில்கள் கட்டப்பட்டன. பக்தர்கள் மனச்சோர்வு இல்லாமல் வாழ்வதற்கு கோவில்களே காரணமாக இருந்தன.
நம் முன்னோர்கள் குடிசைகளில் வாழ்ந்து கோவில்களை உருவாக்கினார்கள். வணிக நோக்கத்தில் நம் நாட்டுக்கு வந்த கிழக்கிந்திய கம்பெனிகள், கோவில்களை வருவாய் துறையின் கீழ் கொண்டு வந்தன. தற்போது, அதே நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன. நான் கோவில்களை பக்தர்கள் கைகளில் ஒப்படைக்க கூறிய துவங்கியதும், வருவாய் குறித்தே பேசப்படுகிறது. நம் முன்னோர்கள் உயிராக நினைத்து உருவாக்கிய கோவில்கள் அழிக்கப்பட்டு விடக்கூடாது என்பதாலேயே, கோவில்களை பக்தர்கள் கைகளில் ஒப்படைக்க வலியுறுத்துகிறேன்.இவ்வாறு, சத்குரு பேசினார்.