பதிவு செய்த நாள்
12
மார்
2021
06:03
திருவனந்தபுரம்:சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பாக நிகழ்ந்த சம்பவங்கள் வருத்தமளிக்கினறன, என, கேரள தேவசம் போர்டு அமைச்சர் சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.
வழக்கு பதிவு: கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலில், வயது வரம்பின்றி அனைத்து பெண்களையும் அனுமதிக்கலாம் என, 2018ல், உச்ச நீதிமன்றம் தீர்ப்புஅளித்தது.இதை எதிர்த்து நடந்த போராட்டங்களை, கேரள அரசு கடுமையாக அடக்கியது. போராட்டம் தொடர்பாக, 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. நடந்திருக்க கூடாத இந்த சம்பவம் தனக்கு மிகுந்த வருத்தம் அளிப்பதாக, கேரள தேவசம் போர்டு அமைச்சர் சுரேந்திரன் கூறி உள்ளார். இந்த வழக்கில், உச்ச நீதிமன்றம் அளிக்கும் இறுதி தீர்ப்புக்கு, கேரள அரசு தலைவணங்கும் என்றும், அவர் கூறியிருந்தார். இதற்கு, சட்டசபை தேர்தலையொட்டி, ஓட்டுக்காக, சுரேந்திரன் முதலைக் கண்ணீர் வடிக்கிறார். அவர் கங்கையில் குளித்தாலும், செய்த பாவம் போகாது, என, கேரள பா.ஜ., தலைவர் சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.
மன்னிப்பு: சுரேந்திரனை பின்பற்றி, முதல்வர் பினராயி விஜயனும், சபரிமலை விவகாரத்தில் நடந்து கொண்ட விதத்திற்கு, மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும், என, காங்., மூத்த தலைவர், ரமேஷ் சென்னிதாலா தெரிவித்துள்ளார்.