பதிவு செய்த நாள்
12
மார்
2021
06:03
பவானிசாகர்: பவானிசாகரை அடுத்த விளாமுண்டி வனப்பகுதியை ஒட்டி அய்யம்பாளையம் கிராமத்தில், தொட்டம்மா, சின்னம்மா மற்றும் மஹாலட்சுமி கோவிலில், மஹா சிவராத்திரி விழா, நேற்று நடந்தது. கிராம தெய்வங்களுக்கு சிறப்பு பூஜை செய்து, குரும்பர் இன மக்கள், பவானி ஆற்றுக்கு அம்மன் அழைப்புக்கு சென்றனர். அங்கும் தலையில் தேங்காய் உடைத்தனர். பின், தீர்த்தக்குடம் எடுத்து ஊர்வலமாக இரவில் கோவிலை அடைந்தனர். மீண்டும் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தியும், பூஜை செய்தும், பொங்கல் வைத்து வழிபட்டனர். இரவு முழுவதும் நடந்த விழாவில், பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட குரும்பர் இன மக்கள் கலந்து கொண்டனர். மழை வேண்டியும், விவசாயம் செழிக்கவும், கால்நடைகள் நோயின்றி வாழவும், தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தியதாக கூறினர்.