பதிவு செய்த நாள்
15
மார்
2021
04:03
காரைக்குடி : காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியமன் கோயிலில், பக்தர்கள் பால்குடம், தீச்சட்டி, பறவைக்காவடி எடுத்தும்,அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் மாசி-பங்குனி திருவிழா மார்ச் 9ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது.விழா தொடங்கிய நாள் முதலே பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர்.நேற்று அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது. முத்தாலம்மன் கோயிலில் இருந்து பக்தர்கள் பலரும் பால்குடம், தீச்சட்டி எடுத்தும், அலகு குத்தியும், பறவைக்காவடி எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். வழிநெடுகிலும், பக்தர்களுக்கு மஞ்சள் நீர் ஊற்றப்பட்டது. மார்ச் 16 ல் திருக்கோயில் கரகம், மது முளைப்பாரி திருவிழாவும், மார்ச் 17 முக்கியத் திருவிழாவான காவடி, பால்குடம், பூக்குழி இறங்குதல் நடக்கிறது.ஏற்பாடுகளை உதவிஆணையர் சிவலிங்கம், செயல் அலுவலர் சுமதி, கணக்கர் அழகுபாண்டி செய்து வருகின்றனர்.