மன்னர் ஒருவர் கருவூலத்தில் பணிபுரிய ஆட்களைத் தேர்வு செய்ய விரும்பினார். பல இளைஞர்கள் பலர் ஆர்வமுடன் வந்தனர். ‘‘இவர்களுக்கு கருவூலத்தை ஒருமுறை சுற்றிக் காட்டுங்கள்’’ என்றார் மன்னர். அங்கிருந்த பொக்கிஷங்களைக் கண்ட இளைஞர்கள் பொருட்களை மறைத்தனர். மன்னரைச் சந்திக்க வந்த போது, ‘‘உங்களுக்கு சோதனை வைக்கப் போகிறேன். வாருங்கள்’’ என்றார் மன்னர். திருடிய அனைவரும் ஒதுங்க, ஒருவன் மட்டும் சோதனைக்கு முன் வந்தான். பொறுப்பை அவனிடம் ஒப்படைத்து, ‘‘ இளைஞர்களே... உங்கள் தவறை நான் அறிவேன். அதற்காகவே கருவூலத்தைப் பார்வையிட அனுப்பினேன்’’ என்றார் மன்னர். ‘‘உண்மையுள்ள மனுஷன் பரிபூரண ஆசீர்வாதங்களைப் பெறுவான்’’