அமாவாசைக்கு அடுத்த நாளில் இருந்து சந்திரன் வளரும். முதல் இரண்டு நாட்கள் பிறை தெரியாது. மூன்றாம் நாளில் இருந்தே தெரிய ஆரம்பிக்கும். இந்நாளில் சந்திரன் களங்கம் இன்றி துாய நிலையில் இருக்கும். நான்காம் நாளில் இருந்து சந்திரனின் மீது நிழல் விழுவதால் சந்திரன் களங்கம் அடைவதாகச் சொல்வர். மூன்றாம் பிறையைத் தான் சிவன் தலையில் ஆபரணமாகச் சூடியிருக்கிறார். களங்கம் இல்லாத துாய மனமும், பக்தியும் கொண்டவர்களை சிவபெருமான் தலை மீது வைத்துக் கொண்டாடுவார். சந்திர தரிசனத்தன்று மேற்கு திசையில் தோன்றும் மூன்றாம் பிறையை தரிசித்தால் மனபலம் அதிகரிக்கும்.