பங்குனி மாதம் பிறக்கும் நேரத்தில் பெண்கள் மேற்கொள்வது காரடையான் நோன்பு. சாவித்திரியை வழிபடுவதால் இதற்கு ‘சாவித்திரி விரதம்’ என்றும் பெயருண்டு. இந்நாளில் தான் சத்தியவானை எமனின் பிடியில் இருந்து மீட்டாள் சாவித்திரி. இதனடிப்படையில் சுமங்கலிகள் தாலி பாக்கியம், கணவருக்கு நீண்ட ஆயுள், தம்பதி ஒற்றுமை வேண்டி விரதமிருப்பர்.