பார்வதி தேவிக்கும், சாவித்திரி நோன்புக்கும் புராணரீதியாக தொடர்புண்டு. ஒருமுறை கயிலாயத்தில் விளையாட்டாக சிவனின் கண்களை மூடினாள் பார்வதி. இதனால் உலகமே இருண்டது. தான் செய்த தவறுக்கு வருந்திய அவள், சிவனிடம் பரிகாரம் கேட்டாள். காஞ்சிபுரத்தில் கம்பை ஆற்றங்கரையில் மணலால் சிவலிங்கம் அமைத்து பூஜிப்பாயாக என வழிகாட்டினார் சிவன். அவளும் வழிபட்டு வந்தபோது ஒருநாள் ஆற்றில் வெள்ளப் பெருக்கு வந்தது. நீரில் அடித்துச் செல்லாமல் இருக்க, சிவலிங்கத்தை பார்வதி இறுக தழுவினாள். அப்போது அங்கு சிவன் காட்சியளித்ததோடு, சாவித்திரி விரத முறையை எடுத்துரைத்தார். பார்வதியும் நோன்பு மேற்கொண்டாள்.