* எதையும் ஆராய்ந்து நடுநிலையுடன் மக்களை நடத்துபவரே சிறந்த ஆட்சியாளர். * உரிய காலத்தில் பெய்யாமல் கெடுப்பதும், உரிய காலத்தில் பெய்து காப்பதும் ஒரே மழையே. * முடியாத செயலையும் முடித்துக் காட்டுபவர் பெரியோர். முடியாது என்பவர் சிறியோர் * தம்மை விடத் தம் பிள்ளைகள் அறிவுடையவர்களாக இருப்பது தான் பெற்றோருக்கு மகிழ்ச்சி தரும். * அன்பு இல்லாதவர் எல்லாப் பொருளும் எனக்கே என்பர். அன்பு உடையவர் தம் உடம்பும் பிறர்க்கு உரியது என்பர். * பணிவும், இன்சொல்லும் மனிதனுக்கு அழகு சேர்க்கும் அணிகலன்கள். * அடுத்தவர் பொருளை அபகரிக்கலாம் என மனதில் நினைப்பதும் கூட தீமை தரும். * ஊக்கமே நிலையான செல்வம். மற்றவை எல்லாம் நில்லாமல் அழிந்து விடும். * தண்ணீரின் உயரத்துக்கு ஏற்ப நீர்ப்பூக்கள் வளரும். ஊக்கத்தின் அளவுக்கு ஏற்ப மனிதர்கள் உயர்வு பெறுவர். * மனதில் குற்றம் இல்லாமல் இருப்பதே சிறந்த அறமாகும். மற்றவை எல்லாம் வெறும் ஆரவாரமே. * பொறாமை கொண்டவருடைய செல்வமும், பொறாமை இல்லாதவருடைய வறுமையும் சான்றோரால் ஆராயப்படும். * செல்வங்களில் சிறப்பானது அருட்செல்வம். பொருட்செல்வம் இழிந்தவரிடம் கூட இருக்கும். . * பசியும், நோயும், பகைமை இன்றி மக்கள் வாழும் நாடு நல்லநாடு. * எவ்வளவு சிறிதானாலும் நல்லவற்றைக் கேட்டால் கேட்ட அளவுக்கு நன்மை ஏற்படும்.