அதிகம் பயன் தருவது சூரியனா சந்திரனா என அறிஞர்களிடையே விவாதம் நடந்தது. சூரியனால் தான் அதிகப் பயன் என பலரும் கருத்து தெரிவித்தனர். அவர்களை கேலி செய்ய எண்ணி, ‘‘என் கருத்தைச் சபையோருக்கு தெரிவிக்க விரும்புகிறேன்’’ என்றார் முல்லா. ‘‘ சந்திரனால் தான் உலகத்திற்கு அதிக நன்மை கிடைக்கிறது. பகலில் இயற்கையாகவே வெளிச்சம் கிடைப்பதால் சூரியனின் உதவி தேவையில்லை. இரவில் இருளைப் போக்கி குளிர்ந்த ஒளி தருவதால் சந்திரனே அதிக பயனுடையது’’ என்றார். இயற்கையாகவே வெளிச்சம் எப்படி கிடைக்கும்? சூரியன் தானே ஒளி கொடுக்கிறது என்ற உண்மை யாருக்குத் தெரியாது. முல்லா கிண்டலாக பேசுகிறார் என்பதை உணர்ந்த அறிஞர்கள் சிரித்தனர்.