திருப்பரங்குன்றத்தில் சுவாமிக்கு போலி பட்டு சாத்துபடி செய்ய தடை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20மார் 2021 03:03
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திருவிழா காலங்களில் சுவாமிகளுக்கு போலி பட்டு, கோரா பரிவட்டங்கள் சாத்துப்படி செய்ய நிர்வாகம் தடை விதித்துள்ளது.இக்கோயிலில் மார்ச் 18 பங்குனித் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியுள்ளது. அன்று முதல் ஏப்., 1 வரை சுவாமி தினமும் ஒரு மண்டகப்படிகளில் எழுந்தருள்வார். அங்கு சுவாமிக்கு பட்டு, பரிவட்டங்கள் வழங்கப்படும். இந்தாண்டு மண்டகப்படிதாரர்கள், திருக்கண் வைப்பவர்கள் சுவாமிக்கு நயமான பட்டு, பரிவட்டங்களை வாங்கி ஒரு நாள் முன்னதாகவே கோயில் உள்துறை பொறுப்பாளர்களிடம் காண்பித்து ரசீது பெற்றுக் கொள்ள வேண்டும், என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.