பழநி : பழநி மலைக்கோயிலில் ரோப்காருக்காக ரூ.25 லட்சம் மதிப்பில் 10 புதிய பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளன.
பழநி மலைக்கோயிலுக்கு பக்தர்கள் செல்ல படிப்பாதை, யானைப்பாதை, ரோப்கார், வின்ச் வசதி உள்ளது. ஒரு பெட்டியில் 4 பேர் பயணிக்க 3 நிமிடங்களில் ரோப்காரில் மலைக்கோயிலுக்கு செல்லலாம். இந்த ரோப்கார் பெட்டிகள் பல ஆண்டுகளாக பயன்பாட்டில் உள்ளது. இதனால் ரோப்காருக்காக கனசெவ்வக வடிவில் பக்கவாட்டில் நகரும் கதவுகளுடன் 10 புதிய பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. முதற்கட்டமாக 8 பெட்டிகள் பொருத்தப்பட்டு பக்தர்கள் பயன்பாட்டுக்கு வரவுள்ளது. மேலும் இரண்டாவது ரோப்கார் அமைக்கும் பணியும் நடந்து வருகிறது.