பெரியகுளத்தில் பங்குனி உத்திர தேர் திருவிழா கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20மார் 2021 05:03
பெரியகுளம்: பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயிலில் பங்குனி உத்திரத்தேர்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இக்கோயிலில் பங்குனி உத்திரத்தேர் திருவிழா விமர்சையாக நடக்கும். அதனையொட்டி நேற்று மேல்மங்கலத்தில் இருந்து வந்த சிவாச்சாரியர்கள் சிவவாத்தியம் முழங்க கொடியேற்றம் நடந்தது. ஏற்பாடுகளை செயல்அலுவலர் அண்ணாதுரை, திருப்பணிக்குழு தலைவர் சசிதரன், உறுப்பினர்கள் சிதம்பரசூரியவேலு, முத்துச்சாமி, நாகராஜன், சந்திரசேகரன், பாண்டியராஜன் செய்தனர். ஏராளமான பக்தர்கள் சமூக இடைவெளியுடன் சுவாமி தரிசனம் செய்தனர். உற்சவர் பாலசுப்பிரமணியர், ராஜேந்திரசோழீஸ்வரர், அறம்வளர்த்தநாயகி அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது. 9ம் நாளான மார்ச் 27ல் தேர்திருவிழா நடக்கிறது.