ராமநாதபுரம்: ராமநாதபுரத்திலுள்ள வழிவிடு முருகன் கோயிலில் பங்குனி உத்திர விழா கொடியேற்றம் நடந்தது. பக்தர்கள் காப்புக்கட்டி விரதம் தொடங்கியுள்ளனர்.
விழாவை முன்னிட்டு, மூலவர் வள்ளி, தெய்வானை சமேத முருகருக்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட பொருட்களால் அபிேஷகம் நடந்தது. வெள்ளிக்கவசத்தில் தீபாராதனை நடந்தது.விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வரும் மார்ச் 28ல் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு காலை, மதியம் அபிேஷக ஆராதனைகள் நடக்கிறது.பக்தர்கள் காவடிகள், பால்குடங்கள் எடுத்தும், பூக்குழி இறங்கிநேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். விழாவில் தினமும் பக்திசொற்பொழிவு நடக்கிறது.இதேப்போல ராமநாதபுரம் அருகேகுயவன்குடி குமரகுருபர சுப்பையா என்னும் சுப்பிரமணியசுவாமி கோயிலில் பங்குனி உத்தரவிழாவில் காலையில் காப்புக்கட்டுதல் நடந்தது. மார்ச் 27 ல் காலை முதல் இரவு வரை ஆறுகால அபிேஷக, பூஜைகள் நடக்கிறது. அதிகாலையில் 3:00 மணிக்குகாவடிகளுடன் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. முகக்கவசம் அணிந்து கொரோனா பரவல் விதிமுறைகளை பின்பற்றி பக்தர்கள் பங்கேற்க வேண்டும் என கோயில் நிர்வாகத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.