சித்தலுார் அம்மன் கோவிலில் தேரோட்டம்: பக்தர்கள் வடம் பிடிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21மார் 2021 02:03
தியாகதுருகம் : சித்தலுார் பெரியநாயகி அம்மன் கோவில் தேர்திருவிழா நேற்று நடந்தது.தியாகதுருகம் அடுத்த சித்தலுார் மணிமுக்தா ஆற்றங்கரையில் பெரியநாயகி அம்மன் கோவில் மாசிதிருவிழா கடந்த 11 ம் தேதி மகாசிவராத்திரி அன்று கொடியேற்றத்துடன் துவங்கியது.தினசரி அம்மன் வீதியுலா நடந்தது. கடந்த 18 ம் தேதி காலை 7 மணிக்கு மயானக்கொள்ளை விழா நடந்தது. பெண்கள் பொங்கல் வைத்தும், மாவிளக்கு தீபம் ஏற்றியும் வழிபட்டனர். பக்தர்கள் பலர் முடி காணிக்கை செலுத்தி நேர்த்திகடன் செய்தனர்.நேற்று தேர்திருவிழாவை முன்னிட்டு மூலவர் அம்மனுக்கு அபிேஷக ஆராதனைகள் நடந்தது. கருவறையில் உள்ள பிரம்மாண்ட புற்றுக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து மாலை அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மனை வைத்து பூஜைகளை செய்த பின் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.