குஜிலியம்பாறை : ராமகிரி கல்யாண நரசிங்க பெருமாள் கோயிலில் பங்குனி மாத தேரோட்ட விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.குஜிலியம்பாறை ராமகிரியில் 900 ஆண்டுகள் பழமை வாய்ந்த கல்யாண நரசிங்க பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி திருக்கோயில் உள்ளது. இங்கு, ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் தேரோட்டம் நடைபெறும். இதற்கான விழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.இதில் கோயில் நிர்வாக தலைவர் கருப்பணன், செயலாளர் வீரப்பன், செயல் அலுவலர் மகேஸ்வரி பங்கேற்றனர். மார்ச் 28ல் குதிரை வாகனத்தில் அம்மன் வீதி உலா நடைபெறும். மார்ச் 29 காலை 9:00 மணிக்கு தேரோட்டம், மார்ச் 30ல் முத்துப்பல்லக்கு, மின் அலங்கார ரத வீதியுலா நடைபெறும்.