நத்தம் : நத்தம் அருகே சேர்வீடு வேட்டைக்காரன் சுவாமி கோயில் விழா நடந்தது. விழாவை முன்னிட்டு நேற்று காலை நத்தம் அவுட்டர் பகுதியில் கண் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. இதையடுத்து மேளதாளம், அதிர்வேட்டு முழங்க முக்கிய வீதிகள் வழியாக சுவாமி நகர்வலம் சென்று மீண்டும் சேர்வீட்டிலுள்ள கோயிலை அடைந்தார். தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம், பூஜைகள், தீபாராதனை நடந்தது. ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர். சேர்வீடு ஊர் பொதுமக்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.