திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் மார்ச் 30ல் நடக்கும் தேரோட்டத்திற்காக, பெரிய வைரத்தேரில் மராமத்து பணிகள் நேற்று துவங்கின. சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனித்திருவிழா மார்ச் 17ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சியான சுவாமி- தெய்வானை திருக்கல்யாணம் மார்ச் 29ல் நடக்கிறது. மார்ச் 30ல் கிரிவீதியில் தேரோட்டம் நடக்கிறது. இதற்கான தேர் மராமத்து பணிகள் நேற்று துவங்கின.