ஒருமுறை பார்வதி விளையாட்டாக சிவனின் கண்களை மறைக்க உலகமே இருளில் மூழ்கியது. இதற்கு பரிகாரமாக பார்வதி பூமிக்கு வந்து தவத்தில் ஈடுபட்டாள். சிவனைத் தன் இதயத்தில் ஆத்ம லிங்கமாக பூஜித்தாள். பார்வதியை மீண்டும் கயிலாயம் வரவழைக்க வேண்டும் என தேவர்கள் முறையிட்டனர். சிவனும் அதை ஏற்று பூமிக்கு வந்து பார்வதியின் சகோதரரான திருமாலைத் தாரை வார்த்துக் கொடுக்கச் செய்து திருமணம் புரிந்தார். மாமரங்கள் நிறைந்த பகுதியில் திருமணம் நடந்ததால் மாங்காடு என்றும், அம்மனுக்கு ‘ஆதி காமாட்சி’ என்றும் பெயர் ஏற்பட்டது. தாரை வார்த்துக் கொடுத்த திருமால், ‘வைகுண்டநாதப் பெருமாள்’ என்னும் பெயரில் கோயில் கொண்டார். காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காடு காமாட்சியை தரிசிக்கும் கன்னியருக்கு நல்ல மணவாழ்க்கை அமையும். ஞாயிறு, செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் காலை முதல் இரவு வரை தரிசனம் செய்யலாம்.