Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மகன்களை கொல்ல முயன்ற பாவம் போக்க திருவண்ணாமலையில் ஹிந்து உரிமை மீட்பு, பூஜாரிகள் உரிமை காக்கும் மாநாடு திருவண்ணாமலையில் ஹிந்து உரிமை ...
முதல் பக்கம் » துளிகள்
பெங்களூரு ரூரலில் தரிசிக்க வேண்டியவை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பெங்களூரு ரூரலில் தரிசிக்க வேண்டியவை

பதிவு செய்த நாள்

10 மார்
2026
08:03

பெங்களூரை தாண்டியதும் பரபரப்புக்கு பஞ்சமில்லாத பசுமையும், அமைதியும் தவழும் ஒரு ஆன்மிக உலகம் உள்ளது. ஆம்... அது தான் பெங்களூரு ரூரல் எனப்படும் கிராமப்புற மாவட்டமாகும். இங்கு வெறும் விவசாய நிலங்களை மட்டுமல்ல, பல நுாற்றாண்டு பழமை வாய்ந்த கோவில்களும் உள்ளன. அப்படியுள்ள பல கோவில்களில் கட்டாயம் தரிசிக்க வேண்டிய மூன்று கோவில்களை இப்போது பார்ப்போம்.


வேணுகோபால சுவாமி தேவனஹள்ளியில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு மிக அருகிலேயே வேணுகோபால சுவாமி கோவில் உள்ளது. வேணுகோபால சுவாமி, தேவனஹள்ளி கோட்டைக்குள் வீற்றிருக்கிறார். கோவிலின் கட்டடக்கலை விஜயநகர் பேரரசை பிரதிபலிக்கிறது. கட்டடக்கலை பலரையும் வியப்பில் ஆழ்த்துகிறது. குறிப்பாக, கருவறையில் புல்லாங்குழலுடன் நிற்கும் கிருஷ்ணரின் திருவுருவம் அத்தனை அழகு. கோவிலின் வெளிச்சுவர்களில் செதுக்கப்பட்டுள்ள ராமாயண காட்சிகள் பிரமாதமாக இருக்கும்.


கதிரி நரசிம்மர் சுவாமி கோவில் இம்மாவட்டத்தின் முக்கிய நகரம் தொட்டபல்லாபூர். மலை அடிவாரத்தில், கதிரி நரசிம்மர் சுவாமி கோவில் அமைந்து உள்ளது. இது, மிகவும் பிரபலமான மற்றும் சக்தி வாய்ந்த கோவிலாகும். இக்கோவிலில் நரசிம்மர் உக்ர உருவத்தில் அருள் பாலிக்கிறார். கோவிலில் உள்ள புனிதக் குளத்தில் நீராடி இறைவனை வழிபட்டால், தீராத நோய்களும் தீரும் என்பது நம்பி க்கை.


அவத்தி நாடு ‘அவத்தி நாடு’ என்றழைக்கப்படும் பகுதியில் அமைந்துள்ள சிவன் கோவில்கள், பெரும்பாலும் 10ம் நுாற்றாண்டிற்கு முற்பட்டவை. இங்குள்ள மல்லிகார்ஜுன சுவாமி கோவில் மிகவும் தொன்மையானது. மலை மேல் இருக்கும் ஈசனைத் தரிசிக்க மலையேற்றம் செய்ய வேண்டியிருக்கும். இயற்கை எழில் சூழ்ந்த சூழலில், குளிர்ந்த காற்றை சுவாசித்தபடி இறைவனைத் தரிசிப்பது ஒரு தியான நிலைக்கு நம்மை இட்டுச் செல்லும். 

பகிர்க copied
 
மேலும் துளிகள் »
temple news
பெங்களூரில் வரலாற்று பிரசித்தி பெற்ற கோவில்களுக்கு பஞ்சம் இல்லை. ஒவ்வொரு பகுதியிலும், புராதன ... மேலும்
 
temple news
பாகல்கோட் மாவட்டம், பாதாமி பகுதியில் மலேகட்டி சிவன் கோவில் உள்ளது. இக்கோவில் சாளுக்கியர் களால் கி.பி., ... மேலும்
 
temple news
பெங்களூரில் இருந்து துமகூரு செல்லும் சாலையில் நெலமங்களா டவுன் அரிசினகுன்டே பகுதியில் ஸ்ரீவிஸ்வரூப ... மேலும்
 
temple news

புகழ் பெற வேண்டுமா செப்டம்பர் 28,2026

நரசிம்மர், கருடன், பெரியாழ்வார் மூவருக்குரிய நட்சத்திரம் சுவாதி. ஸ்ரீவில்லிபுத்துாரிலில் ஆனி மாதம் ... மேலும்
 
temple news
ஓம் அனுமனே போற்றிஓம் அஞ்சனை மைந்தனே போற்றிஓம் அறக்காவலனே போற்றிஓம் அவதார புருஷனே போற்றி ஓம் அறிஞனே ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar