‘பந்திக்கு முந்து; படைக்கு பிந்து’ என்பதை சாப்பாட்டு பிரியர்கள் உருவாக்கிய பழமொழி என்பார்கள். அதன் உட்பொருள் புரிந்தால் உண்மை தெளிவாகும். பலரும் ஒன்று கூடி உண்பதை ‘பந்தி’ என அனைவரும் சேர்ந்து உண்பதை ‘பந்தி’ என்று சொல்வர். ‘வடமொழியில் உள்ள ‘பங்க்தி’ என்பதே தமிழில் ‘பந்தி’ என்றானது. மனத்துாய்மை மிக்க ஒருவர் பந்தியில் சாப்பிட்டால் கூட, அங்குள்ள அனைவருக்கும் பரிமாறும் உணவும் புனிதம் பெறும். அப்படிப்பட்ட நல்லவரை ‘பங்க்தி பாவனர்’ என்பர். நம்முடன் சாப்பிடுவரும் நல்லவராக இருந்தால் அதற்கான நன்மையும் நம்மைச் சேரும் என்றால் ‘பந்திக்கு முந்துவது’ என்பது நல்ல விஷயம் தான்!